சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும்  நீதிபதி கலையரசன் குழுவிற்கு கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகமுன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் புகார் உள்ளது. இதுகுறித்து,  அதிமுக அரசு  நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் விசாரணைக்கு ஆஜராகாமல் சூரப்பா இழுத்தடித்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் சூரப்பான ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சூரப்பாவை விசாரிப்பது சரியல்ல என்று  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்துதெரிவித்திருந்தார். இதனால், அவர்மீதான விசாரணையில் தளர்வு காரணப்பட்டது.  இருப்பினும்  தற்போதைய திமுக அரசு, சூரப்பா மீதான ஊழல்புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய  நீதிபதி கலையரசன் குழுவுக்கு மேலும்  10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  சூரப்பா மீதான புகாரில் இறுதிகட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.