இலங்கை: படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த உடல் தோண்டியெடுப்பு

Must read

கொழும்பு:
லங்கையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து பிரேதப் பரிசோனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது
லசாந்த விக்ரமதுங்க `சண்டே லீடர்` என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தார். அவர் 2009ம் ஆண்டு ஜனவரியில் , கொழும்பில் உள்ள தனது  அலுவலகத்துக்கு வரும் வழியில் , நான்கு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லசாந்த
லசாந்த

அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜகபக்சேவின், மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த சிலரில் இவரும் ஒருவர்.   தான் கொல்லப்படுவதற்கு முன்பே, அப்படி நடக்கக்கூடும் என்று யூகித்திருந்த  லசாந்த விக்ரமதுங்க, அது குறித்து ஒரு தலையங்கம் எழுதி வைத்திருந்தார். அவரது மரணத்துக்கும் பிறகு அத் தலையங்கம், சண்டே லீடர் இதழில் பிரசுரமானது. இது  உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
அத் தலையங்கத்தில், தான் இரு முறை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்ட லசாந்த, தான் கொல்லப்பட்டால், மஹிந்த ராஜபக்சேவின் அரசுதான்  அதற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
அவரது மரணம் குறித்த புலன்விசாரணையிலும் பலவித சந்தேகங்கள் எழுந்தன. மேலும் முன்பு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் ஒன்றில் அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.  ஆனால் மற்றொரு பிரேத பரிசோதனையில் துப்பாக்கிக் காயங்கள் ஏதும் இருப்பதற்கான தடயமே இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
கல்லறை
கல்லறை

மகிந்தராஜபக்சே, கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, இந்த கொலை குறித்த விசாரணையை மீண்டும் துவங்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர். இதையடுத்து மீண்டும் விசாரணை துவங்கியது.
இதன் ஒரு பகுதியாக லசாந்தவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் புதைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பொரெல கல்லறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் லசாந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article