பத்ரிநாத்: கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ அளவுக்கு ஜோஷிமத் நகரம் புதைந்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ நிறுவனம்,  ஜோஷிமத்-அவுலி சாலைக்கு அருகில் 2,180 மீட்டர் உயரத்தில் சரிவின் முகப்பு அமைந்திருப்பதாக தெரிவித்த உள்ளது.

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதி ஜோஷிமத் நகரம்.. இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது. ஜோஷி மடம் (Joshi Mutt) அல்லது ஜோதிர் மடம் (Jyotirmath) என்று அழைக்கப்படும் இந்த பகுதியானது, கடந்த சில நாட்களாக பூமிக்கும் புதைந்து வருகிறது.
`ஜோஷிமத் நகரத்துக்கு அருகில் இயங்கிவரும் தேசிய அனல்மின் நிலையமான என்.டி.பி.சி.எல்-ஆல் கொண்டுவரப்பட்ட நீர்மின் நிலையத்தால்தான் இந்த அழிவு ஏற்பட்டிருக் கிறது ‘ எனக் குற்றம்சாட்டி மக்கள் போராடிவருகின்றனர். அண்மையில் ஜோஷிமத் நகரத்தில் பல கட்டடங்களிலும், நிலத்திலும் விரிசல் ஏற்பட்டது. மக்கள்தொகை அதிகம் கொண்ட மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இந்த நகரம் தற்போது பூமிக்குள் புதையும் ஆபத்தில் இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் 678 கட்டுமானங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் கட்டடங்களில் குடியிருந்த 169-க்கும் அதிகமான குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1.5லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. மேலும், அவர்களை மறுகுடியமர்த்த இரண்டு தனிக்குழுக்களை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, பாதிக்கப்பட்ட கட்டடங்களை மொத்தமாக இடிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கி யிருக்கின்றன. ஒருபுறம், மாநிலப் பேரிடர் மீட்புப்படை சார்பாக எட்டுக்குழுக்கள் ஜோஷிமத்துக்கு வந்து ஆய்வு செய்து, விரிசல் விட்டுள்ள பல கட்டடங்களை இடிக்கத் தொடங்கி யிருக்கின்றனர். இந்தப் பணிகளை மேற்கொள்ள ரூ.2.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றம், அதிகரித்த சுற்றுலாப்பயணிகளின் வருகை, அதனால் அதிகரித்த கட்டுமானப் பணிகளின் விளைவாக இந்தப் பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசால் தொடங்கப்பட்ட நீர்மின் நிலையம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த அமைக்கப்படவிருக்கும் 900 கி.மீ சாலைத் திட்டமும் இந்தப் பேரழிவுக்கான முக்கிய காரணமெனச் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், மக்கள் அனைவரும் இந்த நீர்மின் நிலையம் அமைக்கும் என்.டி.பி.சி.எல்-க்கு எதிராகப் போராட்டத்தையும் நடத்திவருகின்றனர்.

பல ஆண்டுகளாகவே, ஜோஷிமத் நகரத்தில் தொழிற்சாலைகள், பெரும் கட்டிடங்கள் அமைக்க வேண்டாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,  பொதுமக்களும் கூறி வந்தும்,  அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பல தொழிற்சாலைகளின் கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கி, சுற்றுலாத்துறையை மேம்படுத்த சாலைகளை மறுபுறம், இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்.டி.பி.சி.எல் (National Thermal Power Corporation Limited) எனக் கூறி, மக்கள் அதற்கு எதிராக தங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர். அரசு அமைத்து   இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டதே இதுபோன்ற அழிவுகளுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த பேரழிவு குறித்து,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் ஆய்வு செய்தது. அதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை மற்றும் செயற்கை கோள் புகைப்படத்தின் மூலம், ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய நிலம் புதைவு கடந்த 12 நாட்களில் 5.4 செமீ புதைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் முதற்கட்ட ஆய்வில், ஏப்ரல் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் நிலம் சரிவு மெதுவாக இருந்தது, ஜோஷிமத் 8.9 செ.மீ. ஆனால் டிசம்பர் 27, 2022 மற்றும் ஜன. 8, 2023 க்கு இடையில், நிலம் சரிவின் தீவிரம் அதிகரித்து, இந்த 12 நாட்களில் நகரம் 5.4 செ.மீ. ஆனால், டிசம்பர் 27, 2022 மற்றும் ஜனவரி 8, 2023 -க்கு இடையில், ஜோஷிமத் நகரத்தின் புதைவு வேகம் அதிகரித்து, கடந்த 12 நாட்களில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ புதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி சில நாட்களிலேயே சுமார் 5 செ.மீ. புதைந்துள்ளது. நிலம் புதைவின் பரப்பளவு அதிகரித்துள்ளது. ஆனால், இது ஜோஷிமத் நகரின் மையப் பகுதியில் மட்டுமே உள்ளது” என்று என்.ஆர்.எஸ்.சி அறிக்கை தெரிவித்துள்ளது. பொதுவான நிலச்சரிவு வடிவத்தை ஒத்த ஒரு தாழ்வு மண்டலம் அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

இதுதொடர்பாக,  மத்தியஅமைச்சர்கள் நிதின் கட்கரி, ஆர்.கே.சிங், பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜோஷிமத் நிலைமை மற்றும் அப்பகுதி மக்களின் சிரமங்களை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தது. தொடர்ந்து,  அந்த பகுதியில் வசித்து வந்த  169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 589 பேர் இதுவரை நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஜோஷிமத் மற்றும் பிபால்கோடியில் 835 அறைகள் கொண்ட நிவாரண மையம் உள்ளது. அவற்றி ஒரே நேரத்தில், 3,630 பேர் தங்கலாம்.

ஜோஷிமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சந்தை மதிப்புபடி இழப்பீடு வழங்குவதை ஒரு குழு தீர்மானிக்கும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.