யக்குநர் ராஜூமுருகனின் “ஜோக்கர்” திரைப்படம் மக்களிடையே பரவலான பாராட்டுகளை பெற்று வருகிறது.  இந்தபடத்தை திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.
திரைப்படத்துக்கான அக்கறையோடும் நேர்த்தியோடும், “ஆட்டோ சங்கர்”, “சந்தன வீரப்பன்” ஆகிய எதார்த்த தொடர்களை தொலைக்காட்சியில் இயக்கவர் வ.கவுதமன். மேலும் “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தையும் இயக்கியவர்.

ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருன் - பட காட்சி
ஜோக்கர் பட இயக்குநர் ராஜூ முருன் – பட காட்சி

\அவர், “ஜோக்கர்” படம் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
“ராஜூமுருகனின் “ஜோக்கர்” திரைப்படத்தினை தலைவணங்கி பாராட்டுகிறேன்.
கழிவறை கட்டுவதில் கூட ஊழல் செய்யும் இந்த நாற்றம் பிடித்த இந்திய ஒன்றியத்தை தோலுரித்து தொங்கவிட்டிருக்கி்றது ஜோக்கர்.
இந்திய அதிகார வர்க்கத்தை மட்டுமல்ல, தமிழக அதிகார வர்க்கத்தையும் பிரதமர், ஜனாதிபதி உட்பட ஊழலின் ஊற்றுக்கண்களாக திகழும் நமது தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் சகட்டுமேனிக்கு விளாசுகிறது இத்திரைப்படம்.
இதனை ஏதோ நமக்கு அறிவுரை சொல்லும் படமென்று மட்டும் யாரும் நினைத்துவிடக்கூடாது. நாம் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம். நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் நம் சிந்தனையையும் தூண்டிவிட்டு அனுப்புகிற படம். இனத்தின் மீதும் நம் சனத்தின் மீதும் பெரும் பற்றினை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் படம் முழுக்க அன்பும் காதலும் பாசமும் நிறைந்து பேரழகான ஒரு இலக்கியமாக நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது இப்படம்.
ராஜூமுருகன் தனது முதல் படமான “குக்கூ”விலேயே நாயகனுக்கு சுதந்திரம் என்றும் நாயகிக்கு தமிழ்க்கொடி என்றும் பெயரிட்டு சுதந்திர தமிழ்க்கொடியை பறக்க விட்டவர். இப்படத்தினை நாம் திரையரங்கில் பார்த்து மாபெரும் வெற்றி படமாக்கினால் ராஜூமுருகனுக்கு பெருமையல்ல… நமக்குத்தான் பெருமை. ஒரு தமிழ்க் கலைஞன் வளர்வதோடு மட்டுமல்ல, அற்புதமான எத்தனையோ படைப்புகள் அவர் மூலமாக உயிர் பெற்று அது அத்தனையும் உலக அரங்கில் நம் தமிழின் தமிழனின் உரிமை பேசும், உன்னதம் பேசும்.
ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் எனது அன்பான வேண்டுகோள்…
எது எதற்கோ விவாதம் செய்யும் நீங்கள் மனித அறம் பேசும் ஜோக்கரை உடனடியாக விவாத பொருளாக்கினால் மக்களுக்கு பயன்படுவதோடு, இப்படைப்பிற்கு நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதையாகவும் இருக்கும்.
இப்படைப்பில் பங்குகொண்டு மிக மிக சிறப்பாக நடித்த சோமசுந்தரத்தரம், அய்யா மு.ரா,
“புலி வீரன்” எழுத்தாளர் பவா செல்லத்துரை, தேசியக்கொடி கதவுகள் உள்ளிட்ட அனைத்து நடிப்பு கலைஞர்களுக்கும் மற்றும் தொ‌ழி‌ல் நுட்ப கலைஞர்களுக்கும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்த செழியனுக்கும் கதைக்கேற்றவாறு உணர்வு பூர்வமாக பாடல்கள் புனைந்த யுகபாரதிக்கும் தமிழ் சினிமாவின் உச்சமான சிம்மாசனத்தில் நிரந்தரமாக உட்கார தகுதி பெற்ற இயக்குநர் ராஜூமுருகனுக்கும் எனது அன்பான பிரியமான வாழ்த்துக்கள்” என்று தனது முகநூல் பக்கத்தில் இயக்குநர்
வ.கெளதமன் பதிவிட்டிருக்கிறார்.