வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னாள் அதிபரான டிரம்புக்கு எதிராகப் பிரசாரம் செய்து வருகிறார்.. 

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு  தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன., குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

டிரம்புக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன என்றாலும் பெருமளவிலான மக்கள் ஆதரவும் அவருக்குக் காணப்படுகிறது.  ஆகவே அதிபர் தேர்தலில் பலத்த போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த, 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந்தேதி ஆயிரக்கணக்கான  ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேபிட்டால் கட்டிடத்தின் மீது ஏறியும், கொடிகளை ஏந்தியபடி உள்ளே சென்றும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டபோது பலர் காயமடைந்தனர்.  காவல்துறையினர் கலவரக்காரர்களைக் கலைக்க குவிக்கப்பட்டு அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்று .அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தற்போதைய அதிபர் பைடன் தன்னுடைய முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஜோ பைடன் தனது பிரசாரத்தில்,

”மீண்டும் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும். பொதுவாக  டிரம்பின் பிரசாரம் அவரைப் பற்றியே உள்ளதே தவ்ர அமெரிக்காவைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ அல்ல. கடந்த காலத்துடன் தொடர்புடைய ஒன்றாக அவர் பிரசாரம் உள்ளதே தவிர வருங்காலம் பற்றி இருக்கவில்லை.

என்று கூறி உள்ளார்.