ஜித்துராஜ் – தங்கப்பதக்கம்

கோல்டுகோஸ்ட் :

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

10 மீட்டர் ஏர்பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜித்துராஜ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

மெகுலி கோஷ் – வெள்ளிப்பதக்கம்

அதுபோல   மெகுலி கோஷ் வெள்ளிப் பதக்கம், இவர் 17 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வி சன்டேலா வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

பளுதூக்குதல் பிரதீப் சிங் – வெள்ளி

மேலும்,

பளுதூத்துக்குதல் போட்டியில், 105 கிலோ எடை பிரைவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார்.

பதக்கப் பட்டியலில் தற்போதுவரை 15 (8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் ) பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

85 பதங்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் 48 பதங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.