சென்னை:

சென்னையில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் காவிரி பிரச்சினை காரணமாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருவதால், மக்களின் மனநிலையை திசை திரும்பும் ஐபிஎல் போட்டி நடைபெறக்கூடாது என தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டி வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திட்டமிட்டபடி சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.

ஐபிஎல் போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், திட்டமிட்டபடி நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நாளை போட்டிகள் நடைபெற போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  ஐபிஎல் போட்டியை  அரசியல் விவாதங்களில்  இழுக்கக்கூடாது என்றும் ஐபிஎல்  தலைவர்  ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக அரசு உள்பட  பல்வேறு கட்சிகள், அமைப்புகள்   நாளைய போட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக கிரிக்கெட் வாரியம், தனது நிலைப்பாட்டில் உறுதியாக, நாளை போட்டி நடைபெறும் என மீண்டும் அறிவித்திருப்பது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.