டில்லி

ந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்க உள்ளதாக மத்திய  அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி அன்று விதி எண் 370  நீக்கப்பட்டு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.  அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் என அம்மாநிலம்  இரு யூனியன் பிரதேசங்களாகவும் லடாக் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வரப்பட்டது.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அத்துடன் பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்று பாகிஸ்தான் முரையிட்டுளது.   காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.   பல அரசியல்  தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உதம்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.   அவர் தனது உரையில், “மத்திய அரசு காஷ்மீர் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கை சிறப்பானது.   பல அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் அமைதியைச் சீர்குலைக்க நினைத்தனர்.   ஆனால் அப்படி நினைத்தவர்களையே தற்போது நாங்கள் வீட்டுக்காவலில் வைத்துள்ளோம்.

அடுத்ததாக நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது வெற்றிகரமாக நடக்க நீங்கள் பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்கள்.   நாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்து தடையில்லாமல் செல்லும் நாள் மிக அருகில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.