இந்திய மொபைல் சேவை துறையில் ஐந்தாண்டுகளுக்கு முன் இலவச மொபைல் சேவை என்ற மாபெரும் விளம்பரத்தோடு சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ‘ஜியோ’ நிறுவனம் தனது கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியிருக்கிறது.

டிசம்பர் 1 ம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ள ஜியோ, 28 நாடுகளுக்கு 129 ரூபாய் என்று இருந்த கட்டணத்தை ரூ. 155 ஆகவும், 365 நாட்களுக்கு ரூ. 2879 கட்டணத்தை நிர்ணயித்துள்ளது தற்போது இது ரூ. 2399 ஆக உள்ளது.

மொபைல் சேவையை ஜியோ நிறுவனம் துவங்கிய போது இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மொபைல் சேவை நிறுவனங்கள் இருந்தது, வியாபார போட்டி வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட இந்நிறுவனங்கள் பலவும் முடங்கிய நிலையில் இப்போது மூன்று நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து சேவை வழங்கி வருகிறது.

வியாபார போட்டியை சமாளிக்க தங்களது சேவை கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் உயர்த்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது, வீடியோபோன் – ஐடியா நிறுவனமும் தனது சேவை கட்டணத்தை 25 நவம்பர் முதல் 20 முதல் 25 சதவீதம் உயர்த்தி இருக்கிறது.

இந்நிலையில், ஜியோ நிறுவனத்தின் இந்த அதிரடி விலை உயர்வு ஜியோ வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.