ராஞ்சி

டைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மாவட்ட நீதிபதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாக் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஹிராப்பூரில் வசித்வ்ஹு வருகிறார்.  இவருக்குக் காலையில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளது.  இவ்வாறு இவர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது பின்னல் இருந்து வந்த ஒரு ஆட்டோ அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.   இதனால் படுகாயம் அடைந்த நீதிபதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இறந்தது யார் என தெரியாததால் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு அவர் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.  நடைப்பயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த குடும்பத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.  அதையொட்டி இறந்தது நீதிபதி உத்தம் ஆனந்த்  என உறுதி செய்யப்பட்டது. 

இதை விபத்து என முதலில் கருதிய காவல்துறையினரிடம் நீதிபதியின் குடும்பத்தினர் கொலை என புகார் அளித்துள்ளனர்.  இதையொட்டி சிசிடிவி காட்சி மூலம் ஆட்டோ வேண்டுமென்றே அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதை காவல்துறையினர் கண்டு பிடித்து வழக்குப் பதிந்துள்ளனர்.

நீதிபதி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்னும் கேள்வி எழுந்துள்ளது.  சமீபத்தில் முன்னாள் பாஜக எம் எல் ஏ சஞ்சீவ் சிங் உதவியாளர் கொலையில் தொடர்புடைய இருவருக்கு நீதிபதி ஜாமின் அளிக்க மறுத்துள்ளார்.  எனவே குற்றம் சாட்டப்பட்ட தாதா அமந்த் சிங் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையைச் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.   ஜார்க்கண்ட் அரசு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.