ராஞ்சி:

மாட்டுத்தீவன வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு  ஜார்கண்ட் உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

பீகார் முதல்வராக 1995-96 ம் ஆண்டுகளில் லாலுபிரசாத்  இருந்த போது தும்ஹா கரூவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஏற்கனவே 3 வழக்கில் லாலுவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  தும்ஹா கரூவூலம் தொடர்பான 4- வது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது,  ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். உடல்நிலையை காரணம் அவர் பல முறை ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது.