ராஞ்சி:
ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜார்கண்ட் சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா முழுவதும் ஒரே முறையிலான வரி விதிக்கும் ஜிஎஸ்டி மசோதா 10 ஆண்டு இழுபறிக்கு பிறகு கடந்த வாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது.

ஜார்கண்ட் முதல்வர் ரகுபார்தாஸ்
ஜார்கண்ட் முதல்வர் ரகுபார்தாஸ்

இதையடுத்து, பாரதியஜனதா ஆளும் ஜார்கண்ட் சட்டசபையில், ஜிஎஸ்டி மசோதா கொண்டு வர வகை செய்யும் அரசியல் சட்ட திருத்தத்துக்கு ஜார்கண்ட் பேரவை ஒப்புதல் அளித்தது.
ஜார்கண்ட் முதல்வராக பாரதியஜனதாவை சேர்ந்த ரகுபார்தாஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.