30 ஆண்டுகளாக சசிகலாவால் ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார்: தீபா

Must read

சென்னை,

சிகலாவால் கடந்த 30 ஆண்டுகளாக தனது அத்தை ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

ஏற்கனவே பெங்களூர் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.

இதன் காரணமாக தமிழக அரசியல் மேலும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று கூறினார். மேலும்,  சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விரும்பியதே இல்லை என்றும் கூறினார்.

கடந்த  30 ஆண்டு காலமாக ஜெயலலிதா சசிகலாவால்  ஏமாற்றப்பட்டார் எனவும் கூறினார்.

தன்னுடன் இணைந்து பணியாற்ற தனக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றியையும் தீபா தெரிவித்தார்

More articles

Latest article