சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும்  பொது மக்களும், கட்சி தொண்டர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தனியாக சென்றார். அவருக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்,  பொன்னையன், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, மதுசூதனன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏக்களும் 10க்கும் மேற்பட்ட எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜெ.மரணம் குறித்து பி.எச்.பாண்டியன்,  பொன்னையன் மற்றும் ஓபிஎஸ்-சும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்னார், ஜெ.சிகிச்சை பெற்ற வார்டு பகுதிகளில் இருந்து காமிராவை அகற்றியது ஏன் என்றும் அப்பல்லோவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில்,  டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குனர் சீனிவாஸ், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 4 அறிக்கை களை தயார் செய்து,  தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு  முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம்  ஒப்படைத்துள்ளார்.

அந்த அறிக்கைகளில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, டாக்டர் பீலேவின் அறிக்கைகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளது.