சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

இந்த விசாரணை ஆணையம் வரும் 5ந்தேதி முதல் விசாரணையை தொடங்கும் என்று ஆணைய  தலைவர் முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 17ந்தேதி முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று (27)ந்தேதி விசாரணை ஆணையத்தின் காலம் மற்றும் வரம்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதில், ஜெயலலிதா உடல்நலமில்லாமல் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளான செப்டம்பர் 22, 2016 முதல் அவரது மரணம் அடைந்த நாளான  டிசம்பர் 5, 2016 வரை மட்டுமே விசாரணை நடத்தவும், இதற்கு 3 மாத காலம் மட்டுமே அவகாசமும் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வரும் 5ந்தேதி முதல் விசாரணை ஆணையம் தனது பணியை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.