ஒடிசா:
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயந்தி பட்நாயக் காலமானார். அவருக்கு வயது 90.

ஒடிசா முன்னாள் முதல்வர் ஜெ..பி., பட்நாயக்யின் மனைவி ஜெயந்தி பட்நாயக். இவர் நான்குமுறை லோக்சபாவிற்கு எம்.பி.யாக தேர்வு பெற்றார். தேசிய மகளிர் ஆணையம் உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி்ல நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். ஜெயந்தி பட்நாயக் மறைவுக்கு ஒடிசா கவர்னர் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.