திருவனந்தபுரம்:
தென்னாப்பிரிக்காக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி,பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது.

107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான 2-வது டி20 போட்டி அக்டோபர் 2-ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற உள்ளது.