சென்னை:
றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடன வேதா நிலையம்  அரசுடைமையானது.  இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம்,  வேதா இல்லம் அதிகாரப்பூர்வமாக அரசுடைமையாக்கப்பட்டு உள்ளது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது. அவரது மறைவுக்கு பிறகு,  ‘வேதா இல்லத்தை  நினைவு இல்லமாக மாற்று வதாக  தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அந்த வீட்டிற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டது.   வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு போட்டனர். அதில், ஜெயலலிதாவின் வாரிசுகள்  தீபா, தீபக் என நீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது. அதைத்தொடர்ந்து, போயஸ்தோட்ட வீட்டின் சாவியை, தன்னிடம்  தரும்படி தீபக் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில்,  வருமான வரித்துறை சார்பில் மறைந்த  ஜெயலலிதா மீதான வருமான வரி பாக்கியான ரூ.  36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி ,  ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என  உத்தரவிட்டார். இதையடுத்து ரூ. 68 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியது. இதனால் வேதா இல்லம் அரசுடமையாகி உள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத் தின் மூலம் பெற்று கொள்ளலாம்.
நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை.  நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது.
இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.