மிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது.  சட்டமன்றம் கூடியவுடன்,, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  தொடர்ந்து  அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
assemblykarunanidhi-jaya
இதையடுத்து  திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பதவியேற்றனர். பிறகு  வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்றனர்.
இத்துடன் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு.  ஜூன் 3ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.  அன்று  சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்கள். பிறகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் முழு அளவிலான சட்டசபை கூட்டத் தொடருக்கான தேதி முடிவு செய்யப்படும்.
சட்டப்பேரவைக்கு வந்த கருணாநிதி பத்திரிகையாளர்களிடம், “கடமை உள்ளதால் சட்டப்பேரவைக்கு வந்தேன்” என்றார். மேலும், “ தேர்தலுக்கு எதிரான ஆணையம் போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” என்றும்  கூறினார்.

[youtube-feed feed=1]