ஜெயலலிதா உடல்நிலை: அப்பல்லோவின் 2வது அறிக்கை!

Must read

சென்னை,
முதல்வர் ஜெயலலிதா குறித்து அப்பல்லோ  தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.
நேற்று மாலை மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவ அப்பல்லோ நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் முதல்வர் இருதயத்தில் இரண்டு அடைப்பு ஏற்பட்டதாகவும் உடடினயாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது பரபரப்பான சூழ்நிலையில் அப்பல்லோ நிர்வாகம் இரண்டாவது அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில்,  நேற்று இரவு முதல்வருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதாகவும், அதற்கான ECMO சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாவும், அவரது உடல்நிலை மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
appollo-letter
முதல்வர் தொடர்ந்து மிகக் கவலைக்கிடம் (வெரி கிரி்ட்டிகல்)  என்று அப்பல்லோ அறிக்கையிலேயே கூறப்பட்டு இருக்கிறது. இது அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article