டில்லி,
மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதால், சிபிஐ விசாரணை நடத்த  கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் போடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 22ந்தேதி இரவு உடல்நிலை சரியில்லை என்று அப்பல்லோவில் அனு மதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த  5ந்தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல் வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வரு கின்றன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு அவருடன் இருந்தவர்களே காரணம் என பல்வேறு யூகங்கள் வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற அமைப்பு உச்சநீதி மன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா வின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது; ஆகையால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்,  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் அப்பல்லோ மருத்துவமனையிடம் இருந்து பெற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப் பட்டு ள்ளது.
இந்த மனு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்ப தாகவும்,  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பா மற்றும் நடிகை கவுதமி மேலும் பலர் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.