டெல்லி:
பொதுத் துறை வங்கிகளுக்கு போதுமான பணத்தை ரிசர்வ் வங்கி வழங்குவதில்லை என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க துணைத் தலைவர் விஸ்வாஸ் உத்தகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு பொதுத் துறை வங்கிகளுக்கு போதுமான பணத்தை ரிசர்வ் வங்கி வழங் குவதில்லை. பொதுத் துறை வங்கிகளுக்கு இது வரை எவ்வளவு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகள் கொடுக்கும் நிர்பந்தத்தின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு மட்டும் அதிகளவில் பணம் அனுப்புகின்றனர். பண பற்றாகுறை காரணமாக வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.
அதே சமயம் வங்கிகளில் பணிபுரியும் சில அதிகாரிகளின் உதவியுடன் பெறப்பட்ட புதிய ரூபாய் நோடடுக்களை வருமான வரித்துறை மற்றும் அமாலகக்க பிரிவு அதிகாரிகள் கட்டுக்கட்டாக கைப்பற்றி வருகின்றனர். 40 போலி வங்கி கணக்குகளில் ரூ. 100 கோடி டெபாசிட் செய்ய உதவியாக இருந்த 19 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்திருப்பா£க ஆக்ஸிஸ் வங்கி அறிவித்துள்ளது.
உயர் அதிகாரிகள் துணையின்றி இந்த செயல் நடந்திருக்க முடியாது. ரொக்க பணம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்கள் உதவியின்றி இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. அடிமட்ட ஊழியர்கள் மட்டும் தன்னிச்சையாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய மெயிலுக்கு இது வரை பதில் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.