ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார்!

Must read

சென்னை:
ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நன்றாக பேசி வருவதாக  ஜெயா டிவி தகவல் வெளியிட்டுள்ளது.
download
கடந்த மாதம் 22ம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இடையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. கவர்னர், மத்திய அமைச்சர், மற்றும் அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தும் ஜெயலலிதாவை சந்திக்காத சூழ்நிலையால் வதந்தி மேலும் பரவியது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இன்று செய்தி வெளியிட்ட ஜெயா டிவி, “முதல்வர் ஜெயலலிதாவை  சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நன்றாக பேசி வருகிறார்” என்று தெரிவித்துள்ளது.

More articles

Latest article