எடப்பாடி பழனிச்சாமியை அடிமையாக நடத்திய ஜெ.!: ராமதாஸ் அறிக்கை

சென்னை,

ற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிமையாகவே நடத்தி வந்தார் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் தெரிவித்திருப்பதாவது:

“ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அனைத்து அறிவிப்புகளும் தம்மால்தான் வெளி யிடப்பட வேண்டும் என்ற ஆணவத்துடன், அனைத்து அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இப்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் அடிமையாக நடத்திய ஜெயலலிதா, அவர்கள் வெளியிட வேண்டிய அனைத்து அறிவிப்புகளையும் அவரே வெளியிட்டு வந்தார்.

கடந்த 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் 110 விதியின் கீழ் 181 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார் என கூறிய ராமதாஸ் இதனை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றி அமைச்சர்களை அடிமைகளாக நடத்துகிறார்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


English Summary
Jayalalitha performed Edappadi Palanichamy as slave, PMK Leader Ramdoss condemned