சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி ஆஜர் ஆனார்.

அவரிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.  அம்ரீஷ் புஜாரி ஏற்கனவே கடந்த 2011 முதல் 2012 வரை உளவுத்துறை ஐ.ஜியாக பணியாற்றியவர்.

ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  சசிகலாவின் உறவினர்கள், ஜெயா டிவியின் நிர்வாகியுமான விவேக்  2வது முறை,. ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் , சசிகலா உறவினர்கள், ஜெ. வீட்டு வேலைக்காரர்கள்,  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட சமையல்காரர் ராஜம்மாள், மருத்துவர் பாலாஜி 3வது முறை மற்றும், அப்பல்லோவின் சிகிச்சை ஆவனங்கள், எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை, முன்னாள் தலைமை செயலாளர்கள், ஜெ.வின் ஆலோசகர்கள், உதவியாளர்கள் உள்பட பலரிடம் ஆணையம் விசாரணை செய்துள்ள நிலையில்,

சமீபத்தில் முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம், சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஜே.கே. திரிபாதி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இன்று சிபிசிஐடியின் ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி ஆஜரானார். அவரிடம் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை செய்து வருகிறார்.