சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிட வரைபடத்துக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கி உள்ளது.

எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு நினைவிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி வழங்கியுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், ரூ. 50.08 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

இப்பணிக்கு குறைந்த விலைப்புள்ளியில் டெண்டர் கோரிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான வரைபடம் மற்றும் ஸ்டெக்சுரல் வடிவமைப்புகள் சிஎம்டிஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.

‘ஏற்கனவே ஜெயலலிதாவின் நினைவிடம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தலைமை யிலான முதல் அமர்வில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.