நெட்டிசன்:
தனக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில், புன்சிரிப்புடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்ததாக நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்த பதிவு ஒன்று, புகைப்படத்துடன் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவு:
“திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம் வரும் கருணாஸ், “புலிப்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலன் போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வருமாக இருந்த ஜெயலலிதாவை பணிவுடன் சந்தித்தார். தனக்கு ஒரு எம்.எல்.ஏ. சீட்டு தரும்படி வேண்டினார்.
86fc34b5-c87b-4498-9905-efae9cf0e5c0
ஜெயலலிதாவும் திருவாடானை தொகுதியில், அ.தி.மு.க. சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கினார். கருணாஸூம் வெற்றி பெற்றார்.
திரைத்துரையிலோ அரசியலிலோ எந்தவித முக்கியத்துவமும் இல்லாத கருணாஸை, ஜெயலலிதாதான் எம்.எல்.ஏ. ஆக்கினார்.
அப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் புன்சிரிப்புடன் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கிறார் கருணாஸ்.
இதுதான் கருணாஸ் காட்டிய நன்றி!” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், அச்சில் ஏற்ற முடியாத வாசகங்களும் அந்த பதிவில் இருக்கின்றன.
இது போல பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.