ஜெ.,க்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சசிகலாவை சிறையில் தள்ளுவேன்..! : டிராபிக் ராமசாமி ஆவேசம்

Must read

சென்னை:
மிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால், சசிகலாவை சிறையில் தள்ளுவேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலா - ஜெயலலிதா
சசிகலா – ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில்  தெரிவித்ததாவது:
“தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்  உடல்நிலை குறித்து தகவல்களை வெளியே சொல்லவிடாமல் தடுப்பது, அவரது உயிர்த்தோழி என சொல்லபப்டும் சசிகலாதான்.
முதல்வர் உடல் நிலை குறித்து தமிழக அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் தமிழக கவர்னரை கூட பார்க்க அனுமதிக்கவில்லை.
டிராபிக் ராமசாமி
டிராபிக் ராமசாமி

சசிகலாவும் அவர் சார்ந்த ஆட்களும் சதிகார கும்பல்.  ஜெயலலிதாவின் உடல் நலத்துக்கு பொறுப்பு அப்போலோ மருத்துவமனையும் சசிகலா தான். ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் இவர்களை சிறையில் தள்ளுவேன்!” –இவ்வாறு ஆவேசமாக தெரிவித்திருக்கிறார் டிராபிக் ராமசாமி.

More articles

Latest article