சென்னை:
பேச்சுரிமை, கருத்துரிமை என்ற பெயரில் தனிமனித விமர்சனங்களை ஏற்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ந்தேதி முதல் சுமார் 1 மாத காலமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தன. இதையடுத்து போலீசார், சமூக வளைதங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலமாக வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து செய்யப்படுவார்கள் என எச்சரித்தனர்.
மேலும் வதந்தி பரப்பிய 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்ட்டது. 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளான நவநீதகிருஷ்ணன், ராஜீவ் காந்தி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அதில்,  முதல்வர் உடல்நிலை குறித்து தங்களுக்கு பேஸ்புக்கில் வந்த தகவலை மட்டுமே பகிர செய்தோம். ஆனால் அதிமுக நிர்வாகியின் பெயரில்போலீசார் தங்களை துன்புறுத்தி வருகின்றனர். பேஸ்புக் பக்கத்தை முடக்கிவைத்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டும் என்ற எண்ணமில்லை. போலீசாரின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.
hammer
அப்போது போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களுக்கு, இடையூறு செய்யப்படவில்லை. கருத்துரிமை என்ற பெயரில் முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. துன்புறுத்தல் இல்லாமல் சட்டப்பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. பதிவுகள் நீக்கப்பட்டு, பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, நீக்கப்பட்டதாக கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.ராஜேந்திரன்,
அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால்,  அதனை கொண்டு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.
இதுபோன்ற கருத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.
ஏற்கனவே முதல்வர் உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.