சென்னை
மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார்.
karan
அப்பல்லோ மருத்துவமனை வந்த அவர் முதல்வர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த செப்டம்பர் 22ந்தேதி இரவு முதல் அபப்ல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இன்று பிரபல தொழிலதிபர் அதானி குழுமத்தை சேர்ந்த கரன் அதானி சென்னை வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார்..
பின்னர் அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“அகமதாபாத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகவே சென்னை வந்துள்ளேன்.
இங்கு மருத்துவமனையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரையை சந்தித்தேன். அவருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் இருந்தார்.
இருவருமே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல முறையில் தேறி வருவதாகக் கூறினர்.
அவரது உடல்நிலை வெகு விரைவில் பூரண குணமடைய வேண்டுன் என பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது