சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன் 3 மாதத்தில் முடிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று (செப்.27) வெளியிடப்பட்டது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்து.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது  மரணம் தொடர்பாக விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், விசாரணை கமிஷனின் காலம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரசாணை வெளியிடப்பட்டு உளளது.

அதில், கடந்த ஆண்டு செப்.,22ம் தேதி முதல் டிச.5-ம் தேதி வரையிலான சூழல் குறித்து இந்த கமிஷன் விசாரணை நடத்தும் விசாரணை கமிஷன் தனது அறிக்கையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் மேலும் .விசாரணையை தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.