தமிழச்சி - ஜெயலலிதா
தமிழச்சி – ஜெயலலிதா

சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டு வதந்தி பரப்பிய தமிழச்சி என்பவர் மீது தமிழக குற்றப்பிரிவு காவல்துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது.
கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று, உடல் நலக்குறைவால் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிலிருந்து அவரது உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது.
இந்த நிலையில், பேஸ்புக்கில் நேற்று தமிழச்சி என்பவர், “தமிழக முதல்வர் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்” என்று பதிவிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழச்சி பேஸ்புக் பதிவு
தமிழச்சி பேஸ்புக் பதிவு

இந்த நிலையில் அ.தி.மு.கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன், இப்பதிவு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து பிரிவு எண் 153, (இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது), 505(1)(BC) (பொதுமக்களிடையே தவறான தகவலை பரப்பி பீதியை ஏற்படுத்துவது), 505 Class1 Act ஆகிய மூன்று பிரிவுகளில் தமிழச்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தமிழச்சியின் உண்மையான பெயர் யூமா என்று சொல்லப்படுகிறது. அவர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார்.
ஆகவே, சென்னையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகம் மூலமாக பிரான்ஸ் அரசின் அனுமதி பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழச்சி பதில்
தமிழச்சி பதில்

இந்த நிலையில், தன் மீதான புகார்களை வரவேற்பதாகவும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.