அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ச சசிகலா புஷ்பா எம்.பி., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு சந்திகேங்களை எழுப்பினார். மேலும், “2012ம் ஆண்டு, சசிகலா நடராஜனை, ஜெயலலிதா போயஸ்கார்டனை விட்டு வெளியேற்றினார். இதற்கு சசிகலா நடராஜன் பழி வாங்கிவிட்டார்” என்றும் தெரிவித்திருந்தார்.
தவிர, ஜெயலலிதா கன்னத்தில் இருந்த ஊசி குத்தல்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பதியப்படுகின்றன.
சசிகலா புஷ்பாவின் இந்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும் கோவை மாவட்ட மாநகர கழக அவைத் தலைவர் ஏ.பி..நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவி்த்திருப்பதாவது:
“மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா இறந்து இரண்டு நாள் ஆகிறது அதற்குள் இந்த இயக்கத்தை உடைக்க எத்தனை பதிவுகள் இதை ஆராயமல் அனைவரும் பரப்புவது என்னவென்று சொல்வது?
அம்மா அப்போலாவில் அட்மிட் ஆனதில் இருந்து அம்மாவிற்கு அளிக்கப்படும் ட்ரிட்மென்டுகளை கவர்னர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் அதிமுக வை சேர்ந்தவர் இல்லை. மத்தியில் ஆளும் பஜக வை சேர்ந்தவர் அம்மா இறுதி கட்டத்தில் அம்மாவை பரிசோதனை செய்தவர்கள் டெல்லி AIMS மருத்துவமனை டாக்டர்கள். அவர்களும் மத்திய அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
இப்படி இவர்கள் அனைவரும் மோடி அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
இப்படி இருக்கும் போது அம்மா வை “***** “விட்டார்கள் என்ற மட்டரகமான பதிவுகள். இறுதியாக அம்மாவை பார்த்த AIMS டாக்டர்களுக்கு கன்னத்தில் இருந்த அந்த ஓட்டை பற்றி விசாரித்தூ இருக்க மாட்டார்களா? அவர்கள் அறியாத விசயங்களா? விபரீதமாக ஏதும் நடந்திருந்தாலும் “அம்மா”வை அடித்திருந்தாலும் இவர்கள் பரிசோதனையீல் தெரிந்து இருக்காதா?
இப்படி இருக்கும் போது எத்தனை முட்டாள்தனமான பதிவுகள்? இதை ஆராயமால் பரப்புவர்கள் அதிமுக வின் விரோதிகளே. இந்த இயக்கத்தோடு நேராக மோத திரனில்லாத ஓநாய்கள் செய்யும் சதிதிட்டம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
மோடி அம்மாவின் நெருங்கிய நண்பர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். நமது இயக்கத்தை உடைக்க போடப்படும் மொட்டைக் கடிதம் போன்ற பரப்புரைகளை நமது அதிமுக தொண்டர்கள் பரப்பாதிர்கள். அதிமுக என்பது நமது புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி அம்மா என்ற இரு சிங்கங்கள் வளர்த்த ,உருவாக்கிய சிங்க கூட்டம். இங்கே ஓநாய்களின் ஆழுகைகள் எடுபடாது.
எதிரிகளே… முடிந்தால் எம் தாய் வளர்த்த இயக்கத்தோடு மோத நேர்மையான அரசியல் செய்ய அரசியல் களத்திற்கு வாருங்கள் அதைவிட்டு சாக்கடை புழுக்கள் போல் சாக்கடை அரசியல் செய்யாதீர்கள். .உண்மையான அதிமுக தொண்டர் என்றால் இதை பரப்புங்கள்” என்று தனது அறிக்கையில் ஏ.பி. நாகராஜன் தெரிவித்துள்ளார்.