அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ஜெயலலிதா! மாலினி பார்த்தசாரதி

Must read

சென்னை:
“சி.எம். அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..!!!” – மாலினி பார்த்தசாரதி பரபரப்பு தகவல்..!!
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது வதந்திகள் கால் முளைத்தும், இறக்கை கட்டியும் பறக்கின்றன.
தினமும் மாலை 5 மணியானால் தலைநகர் சென்னையில் போக்குவரத்து பாதியாக குறைந்து போகும் அளவிற்கு வதந்திகள் பறக்கின்றன. இந்தநிலையில் நேற்று லண்டனில் இருந்து வந்துள்ள நுரையீல் சிறப்பு மருத்துவர் ரிச்சட் பீலே மற்றும் அப்பல்லோ நிர்வகாத்தினர் ஆகியோர் தனித்தனியே வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், பிரபல இந்து பத்திரிக்கையின் முன்னாள் மேனேஜிங் எடிட்டரும், இந்தியாவின் மிகப் பிரபலமான பத்திரிக்கையாளருமான மாலினி பார்த்தசாரதி முதலமைச்சர் குறித்த நம்பத்தகுந்த தகவல்களை வெளியிட்டுள்ளாhர்.
அதில், அப்பல்லோவில் பணிபுரியும் முக்கிய நிர்வாகி, முதல்வர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என தமக்கு தெரிவித்ததாக டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்திருக்கிறது.
c476ae3a-854b-400d-9b1a-5b7281afcbbd
அது முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இது அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் முக்கிய நிர்வாகி ஒருவர் தமக்கு நம்பத்தகுந்த வகையில் அளித்த தகவல் என தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிக பிரபலமான பத்திரிக்கை துறையை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து முதன் முறையாக வெளியிட்டுள்ள கருத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேலும், மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் பெரும்பாலும் அலசி ஆராய்ந்துதான் கருத்துக்களை தெரிவிப்பார்கள். முதலமைச்சர் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை மாலினி தெரிவித்திருப்பதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அதிமுக தொண்டர்கள்
இதில் என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கிறது என ஒருவர் ட்டிவிட்டரில் கேள்வி கேட்கிறார் மாலினியை. அதற்கு பதிலளித்த மாலினி, செல்வி ஜெயலலிதா எனது நீண்ட நாள் நண்பர் என உருக்கத்தோடு பதிலளித்திருந்தார்.
 
 
 

More articles

Latest article