"அரசியலில் குதிப்பேன்!” : ஜெ., அண்ணன் மகள் தீபா

Must read

அரசியிலலில் ஈடுபடும் விருப்பத்தை ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வெளிப்படுத்தி உள்ளார்.
நியூஸ் எக்ஸ் தனியார் டிவி சானலுக்கு  அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது…

தீபா

தீபா: ஆரம்பத்தில் அத்தையுடன் ஒரே வீட்டில் தான் வசித்தோம் , வளர்ப்பு மகன் சுதாகரன்  திருமணத்துக்கு பிறகுதான் நாங்கள் பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
உங்கள் கோரிக்கை என்ன ?
தீபா: அத்தை (ஜெயலலிதா)யின் உயிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும், நாங்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் போயஸ் இல்லத்தில் தான். நாங்கள் வளர்ந்த வீடு அது.  எங்களுக்குத்தான் உரிமையாக வேண்டும்.
 
ஜெ. சமாதியில் தீபா அஞ்சலி

உங்கள் தம்பி தீபக் சசிகலா தரப்பினருடன் இருக்கிறாரே?
தீபக்குக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது. தம்பியை எப்படியோ அழைத்துப் போய்விட்டார்கள். அத்தையின் அந்திம காரியங்களை ஆண் வாரிசு நிறைவேற்றணும் என்பதற்காக அழைத்து சென்றிருக்கலாம் தம்பியும் சென்றிருக்கலாம்.
உங்கள் அத்தையை பற்றி சொல்லுங்கள்..
தீபா : அத்தை தான் எங்களுக்கு எல்லாம். அவரது ஆதரவில் தான் நாங்கள் வளர்ந்தோம். நான் பிறந்தது முதல் அத்தையின் கையை பிடித்துவளர்ந்தேன். 
என்னை பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் என் அப்பா ஈடுபட்டபோது, நல்ல பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று அத்தை வலியுறுத்தினார். எனக்கு தீபா என்று பெயர் வைத்தவரே அத்தை தான் . எனக்கு அத்தை எப்போதுமே புத்தகங்கள் தான் பரிசளிப்பார். அவர் என்சைக்ளோப்பிட்டியா உட்பட பல புத்தகங்களையும் பரிசாக கொடுத்துள்ளார். 
அத்தை என் தந்தை மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார்.  பெரியவர்களாகிவிட்ட அவர்கள் இருவரும் சிறு பிள்ளைகள் போல் விளையாட்டுச் சண்டை போட்டு கொள்வார்கள். நாங்கள் அதை பார்த்துது ரசிப்போம்.
அத்தையின் வீட்டில் தங்கி தான் பள்ளிக்கு போவேன். 1987 வரை இது நீடித்தது.  அதன் பின்னரும் நான் வந்து போய் கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் நிரந்தரமாக அத்தையை சந்திக்க முடியாமல் போய்விட்டது.  
கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் அத்தையை சந்தித்தீர்கள்?
அத்தையை பார்க்க முடியாமல் போன போது 2002 ஆம் ஆண்டு பிப்.24 அன்று அத்தை அழைத்ததாக தகவல் கூறி என்னை அழைத்து சென்றார்கள்.  அன்று அத்தையின் பிறந்த நாள்.  அன்று முழுதும் அத்தையுடனே இருந்தேன். என்னை எங்கேயும் போகக்கூடாது என்று தன்னுடனேயே அன்று முழுதும் இருக்கச் சொன்னார்.
எல்லா விளாயங்களையும் அன்று என்னிடம் மனம் விட்டு பேசினார். வாழ்க்கையில் அனைவரும் அவரை ஒதுக்கியபோது, தனிமை உணர்வில் அவர் பட்ட  மனக்கஷ்டத்தை மனம் திறந்து அன்று தான் என்னிடம் சொன்னார். அப்போது ஏன் அப்பாவை பிரிந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு மட்டும் பதிலளிக்கவில்லை. 
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு என்னை சந்திக்க அழைத்துள்ளார். அப்போது நான் லண்டனிலிருந்ததால் சந்திக்க முடியாமல் போனது. அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு என்ன தோன்றியதோ என்னை பார்க்க அழைத்தார் நானும் ஓடோடி சென்றேன். ஆனால் இடையில் உள்ளவர்கள் தடுத்துவிட்டார்கள்.
தாயார் சந்தியாவுடன் ஜெயலலிதாவும் சகோதரரும்

உங்களைப்பற்றி சொல்லுங்கள்?
நான் பிறந்தது 1974 ல் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் தான் பிறந்தேன். அங்கேதான் வளர்ந்தேன்.  1987 வரை அத்தையுடன் இருந்தேன். நான் லண்டன் யூனிவர்சிட்டியில் ஜர்னலிசம் படித்துள்ளேன். எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். குழந்தைகள் இல்லை. 
உங்கள் லட்சியம் என்ன?
ஜர்னலிசம் பற்றி ரிசர்ச் செய்து வருகிறேன். அத்தையின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்து கட்டுரை எழுத இருக்கிறேன். 
அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா?  ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட இருக்கிறீர்களா?
மக்கள் விரும்பினால் அரசியலில் ஈடுபடுவேன். ஆர்.கே.நகர் மக்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன்.
–   இவ்வாறு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article