டில்லி

பிரபல கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தம்மை வீடியோவில் வந்த ஒரு முதிய பெண்மணி அசர வைத்துள்ளதாக கூறி உள்ளார்.

இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. ஆனால் அந்த மதங்களில் உள்ள பலரையும் இணிக்கும் பொது மதமாக கிரிக்கெட் உள்ளது என்பது மிகையாகாது. கிரிக்கெட் ரசிகர்கள் அந்த அளவுக்கு இனம், மொழி, வயது பேதமின்றி உள்ளனர். உலகக் கோப்பை பந்தயத்தின் போது சாருலதா என்னும் மூதாட்டி பிகில் ஊதி ரசித்தது நினைவிருக்கலாம்.

தற்போது மற்றொரு முதிய பெண்மணி சிவப்பு நிற சேலை அணிந்து ஒரு பிளாஸ்டிக் பந்துடன் ஓடி வந்து பந்து வீசும் காட்சி வெளியாகி உள்ளது. iஇந்த மூதாட்டி இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் பாணியில் பந்து வீசுகிறார்.  இதை பலரும் கண்டு ரசித்துள்ளனர். சாருலதாவுக்கு அடுத்த படியாக இந்த மூதாட்டி புகழ் பெற்றுள்ளார்.

 

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ரா தம்மை இந்த வீடியோவில் காணப்படும் மூதாட்டி அசர வைத்துள்ளதாக கூறி உள்ளார் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த மூதாட்டி பந்து வீசும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இதுவே எனது நாளை உருவாக்கி உள்ளது என பதிந்துள்ளார்.