சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியுடன், ISRO மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) இணைந்து 2026 இல் LUPEX (சந்திராயன்-4) ஐ விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

LUPEX நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி நிலவில் நீர் இருப்பு மற்றும் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு அதன் பயன்பாட்டினைக் கண்டறியும்.

இந்த தரவு மூலம், எதிர்காலத்தில் பூமியில் இருந்து சந்திரனுக்கு எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறிய உதவும்.

விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு குடிநீராக மட்டுமல்லாமல் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனாகவும், ராக்கெட் எரிபொருளுக்கான ஹைட்ரஜனாகவும் மாற்ற உதவும் தவிர கதிர்வீச்சுக் கவசமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

2026 ம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த LUPEX திட்டத்தில் இந்தியாவுடன் ஜப்பானும் இனைந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.