ஜப்பான்,
ப்பானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.6 ஆக பதிவானது. இதனால், வீடுகள் குலுங்கின.நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை
ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள டோட்டோரி என்ற இடத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
earthquack
பூமிக்கு அடியில் 6.3 கிலோ மீட்டர் ஆழத்தில் குரயோசி நகரம் அருகே இந்த  நில நடுக்கம் ஏற்பட்டதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
உலகின் அதிக நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படக் கூடிய ஜப்பான் நாட்டில் பலமுறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% ரிக்டர் அளவுகோலில் 6-க்கு மேல் பதிவான நிலநடுக்கங்கள் ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர்அளவுகோலில் 9 ஆக பதிவானது.
இதனால் மிகப் பெரிய சுனாமி பேரலை உருவாகி பல உயிர்களை சூறையாடியது.
இதனால் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையமும் பாதிக்கப் பட்டது. இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய கொடூர இயற்கை பேரழிவு என கூறப்பட்டது.