கனடா அரசு இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பண்பாட்டு மாதமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து கனடா வாழ் தமிழர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

gary

கேரி ஆனந்தசங்கரி, கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்

இந்த அறிவிப்பு வெளியிடப்பட காரணமாக திகழ்ந்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரிக்கு கனடியன் தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்பு நன்றி தெரிவித்திருக்கிறது.
1950-களில் தமிழர்கள் முதன் முறையாக கனடாவில் குடியேறினர், அதுமுதற்கொண்டு கனடாவின் வளர்ச்சியில் தமிழர்களும் தங்களது பங்களிப்பை பெருமளவில் அளித்து வந்திருக்கின்றனர். அந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில்தான் கனடா அரசு தமிழுக்கு இந்த கெளவரவத்தை அளித்திருக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் கனடா குடிமக்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தமிழர்களின் கலை,பண்பாடு ஆகியற்றை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.