டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராமங்ரகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்றைய தினம் உத்தரபிரதேசம் உள்பட   பல  மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில்  ரூபாய் 1800 கோடி மதிப்பீட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப் படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளத.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 2024 ஜனவரியில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ராமர்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.30 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை நிறுவப்பட உள்ளது.

பிரம்மாண்ட கோவில்: 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள் ,மூன்று தளங்களுடன் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக , அமைக்கப் பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும் , முதல் தளத்தில் 132 தூண்களும் , இரண்டாவது தளத்தில் 74 தூண்களும், அமைக்கப்பட்டுள்ளன.

.12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும். பிரம்மாண்ட கோவில்: புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற இயற்கை பாதிப்புக்களில் இருந்து திருக்கோயிலைப் பாதுகாக்கும் விதமாக கோயிலைச் சுற்றி மூன்று அடுக்குகளில் மரம் வளர்ப்பு மற்றும் நந்தவனம் வளர்ப்பு முறைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்குத் திட்டமதிப்பு ரூபாய் 1700 கோடி வரை முடிவு செய்திருந்த போதிலும் ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் படும்கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

2022 ஜூன் மாதம் 1ம் தேதி உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த குழந்தை இராமர் கோயிலின் கருவறை கட்ட அடிக்கல் நாட்டினார். குழந்தை இராமர் கோயிலுக்கான கருவறை பீடம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வந்த கிரானைட் கற்களால் அமைக்கப் பட்டுள்ளது .

கீழ்தளத்தில் உள்ள இந்த கருவறையில் தான் மூலவர் ஸ்ரீ இராமர் பிரதிஷ்டை செய்யப் பட இருக்கிறது . புனித தீர்த்தம்: மூலவரை இராம் லல்லா என்கிறார்கள். இராம் லல்லா என்றால் குழந்தை இராமர் அல்லது பால இராமர் எனப்பொருள்படும் .

இந்த இராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார். மகரசங்கராந்தி நாளில் நடைபெற உள்ள ஸ்ரீ இராமர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இது சமயம் பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ இராமருக்கு அபிஷேகம் நடைபெற இருக்கிறது.

அயோத்தியில் நடைபெறும் இந்த மகத்தான விழாவில் கலந்து கொள்வதற்கு இப்போதே பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்துக்கள் ஆயுத்தமாகி வருகிறார்கள். 2024ம் ஆண்டு சித்திரை மாதம் ராமநவமியின் முதல் நாளில் ராமபிரானின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று சரியாக 12 மணிக்கு, சூரிய கதிர்கள் ராம் லல்லா சிலையின் மீது சிறிது நேரம் விழும். அது இராம பக்தர்களுக்கு ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும்.  இதைத்தொடர்ந்து, ஜனவரி 1 ம் தேதியில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி வரைக்கும் அயோத்தி ஸ்ரீ இராமர் திருக்கோயிலில் தொடர் திருவிழாக்கள் நடை பெற்று வருகின்றன.

பாரதத்தின் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடன் ராமபிரான் பாதுகா, திரு உருவ சிலையுடன் அமைக்கப்பட்ட புனித பெட்டகம் சிறப்பு ரதத்தில் தன் பயணத்தை தொடங்கி உள்ளது.   இந்த ப புனித பெட்டகமானது நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சென்று மக்கள் வழிபாடு செய்த பின்னர் கும்பாபிஷேகத்தின் போது அயோத்தி சென்றடைய உள்ளது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 90 நாட்களில் 108 இடங்களில் 108 நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 108 தெய்வீக தொடர் நிகழ்வின் தொடக்க விழா இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.  ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ள செங்கல்கள் கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்டு தொடர்ந்து வந்து சேர்ந்த இந்தச் செங்கல்கள் பூஜை செய்யப்பட்டு இராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புனித பெட்டகமானது நாடு முழுவதும் பயணம் செய்யப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோயிலில் வரும் 16 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதால், கடுமையான பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அதனால் கும்பாபிஷேக தினத்தன்று பொதுமக்கள் வரவேண்டாம் என ராமர்கோவில் அறக்கட்டளை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே சமயம் நேரில் காண வாய்ப்பில்லா மக்கள் நேரடியாக விழா சம்பவங்களை காணும் வசதியும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, வரும் 23ந்தேதி முதல் ராமர்கோவிலை தரிசிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி முதல் பொதுமக்கள் ராம் லல்லாவை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.