சென்னை: பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பும் வகையில், ஜனவரி 18ந்தேதியும் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொங்கல் விடுமுறையாக கடந்த ‘14-ம் தேதி முதல் 17ந்தேதி வரை 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று ஜனவரி 15 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக ஜனவரி 14ந்தேதி போகி பண்டிகையும், இதை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த பிறகு சொந்த ஊருக்கு மக்கள் திரும்புவார்கள். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜனவரி 18-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பின்படி ஜனவரி 18-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்கு திரும்பிய மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக, விடுமுறையை ஒரு நாள் மட்டும் கூட்டி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், அதை ஏற்று தமிழ்நாடு அரசு 18ந்தேதியும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.