ஜனவரி 15: இந்திய ராணுவ தினம் இன்று…

Must read

வ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ம் தேதி இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. : இந்தியா தனது 73 வது ராணுவ தினத்தை இன்று கொண்டாடுகிறது.

ஜெனரல் ( பீல்ட் மார்ஷல்) கே.எம்.கரியப்பா ஜனவரி 15, 1949 அன்று இந்திய ராணுவத்தின் தளபதியாக முதன்முதலாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்தே, இன்றைய நாள்  ஒவ்வொரு ஆண்டும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆண்டுதோறும் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு  இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். சுதந்திர இந்தியாவில் இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி பதவியேற்றார். ‘இந்தியாவின் வெற்றி’ என்று பொருள்படும் ‘ஜெயில் இந்தி’ என்ற வாசகத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு ஆங்கில அதிகாரி ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சர் இருந்தார். சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து ஜெனரல் கே எம் கரியப்பா இந்திய இராணுவ தளபதியாக பதவியை ஏற்றார்.

தன்னலமற்ற சேவை மற்றும் சகோதரத்துவத்திற்கு மிகப் பெரிய முன்மாதிரியாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் மீதுள்ள அன்புக்கும் நாட்டின் வீரர்களை க கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதி இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து இராணுவ கட்டளை தலைமையகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் இராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

73 ஆவது இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, 1971 ல் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மகத்தான வெற்றியின் ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில் இந்திய விஜயம் மாரத்தான் ‘விஜய் ரன்’ ஏற்பாடு செய்யும்.  இந்த நாளில் துணிச்சலான வீரர்களின் வீரத்திற்கு தேசமும் அஞ்சலி செலுத்துகிறது.

இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் தளபதியாக இருந்த ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடமிருந்து இந்திய இராணுவத்தின் ஆட்சியை அவர் ஏற்றுக்கொண்டார்.

 

More articles

Latest article