'டாக்டர்' படத்தில் இணைந்த புட்டபொம்மா பாடல் நடன இயக்குனர்…..!

Must read

 

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் ‘டாக்டர்’ .
இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி பாபு, இளவரசு, ‘கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது .
டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது .
இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது இந்த பாடல்.குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.


ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காந்தகண்ணழகி பாடலில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article