சென்னை: தமிழ்நாட்டில் மழை வெள்ளம் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்ட சேலம்  இளைஞரணி மாநாட்டிற்கான தேதியை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி,   ஜனவரி .21ந்தேதி சேலத்தில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு  மாநாடு  2023ம் ஆண்டு டிசம்பர் டிச.17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் காரணமாக, திமுக இளைஞரணி தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து டிசம்பர் 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அப்போது தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இளைஞர் அணி மாநாடு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.  அதன்படி,  ஒத்தி வைக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு”, வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்” என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.