ஜாம்நகர்:

குஜராத் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமாக கைதி ஒருவர் லாக்கப்பதில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில், தற்போது, காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2002ம்ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நடைபெற்ற மத கலவரம் தொடர் பான விசாரணையில், மோடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட். இதன் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு அவர் ஆளான நிலையில், தற்போது 30 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் ஜாம்நகர் நீதி மன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற  கோத்ரா கலவரத்துக்கு, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிதான் காரணம் என்றும், இந்துக்கள் நடத்திய  வன்முறையை தடுக்க வேண்டாம் என முதல்வராக இருந்த மோடி, காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசினார் என குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்.

இதன் காரணமாக  துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் அவஸ்தை அடைந்தார்.  பின்னர் 2015-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்தே சஞ்சீவ் பட் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதற்கிடையில்  கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது, மோடியை எதிர்த்து  தொகுதியில் சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா களமிறங்கினார். அப்போது  மோடிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சஞ்சீவ் பட் ஜாம்நகரில் பணியாற்றிய போது, மீது, கடந்த 1989-ம் ஆண்டு  நடை பெற்ற மதக்கலவரத்தின்போது ஏராளமானோரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தார். அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு காரணம் சஞ்சீவ் பட் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 30ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ஜாம்நகர் லாக்கப் மரண வழக்கில் இன்று ஜாம்நகர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.. அதில், சஞ்சீவ் பட் குற்றவாளி என்று கூறி அவருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.