வனியாபுரம்

துரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

வருடா வருடம் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.   இந்தப் போட்டிக்காக பல விதிமுறைகள் விதிக்கப்பட்டு அதன்படி மாடுபிடி வீரர்களும்,  மாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்த வருடப் போட்டி இன்று காலை 7.40க்கு தொடங்கி உள்ளது.   இந்தப் போட்டியை மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ், காவல்துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்,  விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன்.   திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ்  ஆகியோர் இணந்து தொடங்கி வைத்தனர்.

இந்தப் போட்டியில் 216 காளைகள் தேர்வு பெற்று வாடி வாசல் சென்றுள்ளன.   இந்தக் காளைகளை அடக்க 624 வீரர்கள் களம் இறங்குகின்றனர்.    மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.    பூஜையுடன் தொடங்கப் பட்ட இந்த ஜல்லிக்கட்டை மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.