சென்னை,

மிழகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தனர்.

நேற்று இரவு 7 மணி அளவில் ஜனாதிபதியிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், தமிழகத்தில்  ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுக்க கோரியும், மழையின்றி தமிழகத்தில் நிலவும் வறட்சி, இலங்கை கடற்படையின் அத்துமீறல்/தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் டாக்டர் நாசே. ஜெ. ராமச்சந்திரன், திரு. எம். கிருஷ்ணசாமி, திரு. கே.எஸ். அழகிரி, திரு. பெ. விஸ்வநாதன், திரு. கே. கோபிநாத், திரு. கு. செல்வப்பெருந்தகை, திருமதி. குஷ்பூ சுந்தர் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.