பெங்களூரு:
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் உலகில் தமிழர் வாழும் பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், கர்நாடக தலைவர் பெங்களூருவில் டவுன் ஹால் முன்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
மாலை நான்கு மணிக்கு 25 நபர்கள் மட்டும் பெங்களூரு டவுன் ஹால் முன்பு வந்தனர். காவல்துறை அனுமதி வாங்கவில்லை என்பதால் போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடம் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க வந்திருக்கிறோம் என்று சொன்னதும் அவர்கள் ஏதும் சொல்லவில்லை.
ஒரு மணிநேரத்தில் ஆயிரம் இளைஞர்கள் சேர்ந்தனர். பெங்களூருவிலுள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள், கர்நாடகா தமிழ் அமைப்பினர், சில கட்சி தலைவர்கள், சில நடிகர்களின் ரசிகர்கள் என நேரம் ஆக ஆக கூட்டம் பல்லாயிரத்தை தாண்டியது.
அந்த வழியாக சென்ற கன்னடர்கள் கூட ஜல்லிக்கட்டிற்காகன போராட்டத்துக்கு நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று ன்னடத்தில் கோஷம் எழுப்பினர்.
மத்திய அரசுக்கு எதிராகவும், பீட்டாவை தடை செய்யவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இரண்டு மணிநேரத்தில் ஆகிவிட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

அதன் பிறகு காவல்துறையினர் போராட்ட காரர்களிடம் கேட்டு கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


முன்அனுமதி பெறாவிட்டாலும், தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு கர்ந்தாக போலீஸார் அனுமதி அளித்ததும், கன்னடர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு குரல் கொடுத்தும் ஆச்சரியமான விசயங்கள்தான்.