ஜல்லிக்கட்டு: நீச்சல் வீரரை முடமாக்கிய காவல்துறை தடியடி!

Must read

தாக்குதலுக்கு ஆளானா நீச்சல் வீரர் &ரெயில்வே டிடிஆர் பிரேம்நாத்

சென்னை,

ல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடியில்  நீச்சல் வீரர் ஒருவர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

ஒருவாரமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தை தொடர்ந்து, சென்னை மெரினாவில் போராடிய, போராட்டக்காரர்களை  போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்தனர். இந்த நேரத்தில், சமூக விரோதிகளால் கடற்கரை பகுதி வன்முறை களமாக  மாற்றப்பட்டது. இதையடுத்து தடியடி, கல்வீச்சு, தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  கடந்த 23ம் தேதி போலீசார் வீடுபுகுந்து நடத்திய தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களே குடிசைகளுக்கு தீ வைப்பு, டூவீலர்களை அடித்து உடைப்பு, கற்களை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

போலீசாரின் தாக்குதலில் ரெயில்வே டிடிஆர் ஒருவரின் கை எலும்பு முறிந்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்காத தன்னை போலீசார் கடுமையாக தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வன்முறையின்போது,  திருவல்லிக்கேணி பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த போராட்டக்கா ரர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து கைது செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த ரெயில்வே டிடிஆர் பிரேம்நாத்தையும் போலீசார் தாக்கியுள்ளனர்.

அவரும் அவரது பெற்றோரும் எத்தனையோ முறை, அவர் போராட்டத்தில் பங்கேற்வில்லை, பணி முடிந்து இப்போதுதான் வீடு திரும்பினார்  என்று கூறியும் அதனை கேட்காத காவல்துறையினர் அவரை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினர். இதில் அவரது கை எலும்பு முறிந்தது.

டிடிஆர் பிரேம்நாத் நீச்சல் வீரர் ஆவார். இவர் நீச்சல் போட்டிகளில் வெற்றிபெற்றதன் காரண மாகவே ரெயில்வே பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால்,  மூன்று நாட்கள் சிறையில் இருந்த அவர் தற்போது  நிபந்தனை ஜாமீனில்

வெளிவந்துள்ளார். கை எலும்பு முறிந்துள்ளதால் அதற்கான சிகிச்சை பெற்று வரும் அவர்,   பழையபடி நீச்சல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்மீது வன்முறை வழக்குப் பதியப்பட்டதால் ரெயில்வே நிர்வாகம் தன் மீது என்ன நடவடிக்கை எடுக்குமோ? தனது எதிர்காலம் என்னவாகுமோ என பீதியடைந்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article