தமிழகம் முழுதும் போராட்ட கள நிலை: தற்போதையே (காலை 9 மணி) நிலவரம்

Must read

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகம் முழுதும் போராடிவரும் இளைஞர்களை போராட்டக்களத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள்.

“ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராடினீர்கள். உங்களுக்கு காவல்துறையும் முழு ஒத்துழைப்பு அளித்தது. தற்போது ஜல்லிக்கட்டு தடையை நீக்க அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்திருக்கிறுத. உங்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. ஆகவே மகிழ்ச்சியுடன் கலையுங்கள்” என்று காவல்துறையினர் தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களது கோரிக்கையை ஏற்று பலர் கலைந்து சென்றுவிட்டார்கள். ஆனால் சிலர் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். அவர்களிடம் காவல்துறையினர்  அமைதியான முறையில் எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் போராடியவர்களில் சிலர் வெளியேறாமல் இருக்க, அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் வெளியேற்றிவிட்டனர்.

காவல்துறையின் அறிவிப்பை ஏற்று, நெல்லை, விழுப்புரம், திருத்தணி ஆகிய இடங்களில் இளைஞ்ர்கள் ள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

முரை தமுக்கம் மைதானத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது..

சிவகாசியில் அனைவரும் தேசியகாீதம் பாடி கலைந்து சென்றனர்.

அரியலூரில் வெளியேறமறுத்த சிலரை காவல்துறையினர் கட்டாயமாக வெளியேற்றினர்.

திருச்சி, பெரம்பூர், ஆகிய ஊர்களில் இன்னும் சிலர் போராடி வருகிறார்கள். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தேனியில் போராட்டம் வாபஸ் பெற்றதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தற்காலிகம்தான் என்றும் தேவையானால் மீண்டும் போராடுவோம் என்று இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருத்தணி ஆகிய ஊர்களில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். ஆனால் சிலர் மட்டும் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றார்கள். அவர்களில் பெரும்பாலானோரை, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.,

மதுரை  தமுக்க் மைதானம், அலங்காநல்லூர் வாடிவாசல்  உள்ளிட்ட சில இடங்களில போராட்டக்கார்ரகள் பெரும்பாலோர் கலையாத நிலை. இங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article